Saturday, November 27, 2010

டாக்டர் புரட்சித்தலைவி-அதிமுக செய்திகள்: தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்:ஆர்ப்பாட்டத்தில்...

டாக்டர் புரட்சித்தலைவி-அதிமுக செய்திகள்: தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்:ஆர்ப்பாட்டத்தில்...: "சென்னை:''நான்கரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, மாணவர்கள் கடத்தல் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்க வழிவகுத்ததுதான் தி.மு.க., அரசின் சாதனையாக உள்ள..."

Friday, November 12, 2010

இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்தி

இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள், உடனுக்குடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2007 - 1,000, 2008 - 1,250, 2009 - 1,550 என தொடர்ந்து, 2010ல் ஒவ்வொரு நாளும் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து, நேற்று முன்தினம் அதிகபட்சமாக, கிராம் 1,915 ரூபாய்க்கு விற்றது. இந்நிலையில் நேற்று, தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு எட்டு ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் குறைந்து, கிராம் 1,907 ரூபாய்க்கும், சவரன் 15 ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியா, விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கு வர்த்தகத்தை சரி செய்யும் விதமாகவும், தங்கம் விலையை கட்டுப்படுத்தும் வகையிலும், ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் ஆகிய ஆபரணங்களை நீக்க, மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக பரவிய தகவலால், வியாபாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகை கடை உரிமையாளர் கூறியதாவது: ஆபரண பொருளாக கருதப்பட்டு வந்த தங்கம், தற்போது சர்வதேச அளவில் வர்த்தக ரீதியில் வியாபார பொருளாக கருதப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, அவுன்ஸ் 800 முதல் 900 டாலர் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், ஒரு ஆண்டாக 1,000 டாலருக்கு மேல் அதிகரித்து, தற்போது 1,442 டாலராக உயர்ந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தங்கம் அவுன்ஸ் 2,000 டாலராக உயர்ந்து விடும். சர்வதேச சந்தையில் அவுன்சின் விலையில் உயர்வு ஏற்பட்டால், இந்தியாவில் தங்கம் கிராம் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். இதை தவிர்க்கவும், ஆன்-லைன் வர்த்தகத்தில் நுழைந்துள்ள சீனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்தியாவில் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர, ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து, வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மும்பை வியாபாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கம் நீக்கப்பட்டால், தமிழகத்தில் தங்கம் விலையில் கடும் சரிவு ஏற்படும். கிராம் 1,200 ரூபாய்க்கும், சவரன் 9,600 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு உரிமையாளர் கூறினார்.
You might also like:

Saturday, October 9, 2010

கடவுள் இருகின்றரா?

ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம்.

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால்தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.

சத்தமாகக் கேட்டான். "என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'.

பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது . 'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால்தடங்களைக் கவனித்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.

அவன் சற்றி பின்னோக்கிப் பார்த்தான் . அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான். "கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?"

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்பகாலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை. இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான் நீ உன்னுடைய காலடிசுவடுகளைக் காணமுடியவில்லை...."

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதில்லை. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை. சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள், அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள.

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. கடவுள் கணக்கு சொல்வதில்லை. எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக்கூடாது. எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வரவழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே, அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை.

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது. இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவமடைவதும் சாத்தியமல்ல. உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை. கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள். குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில் குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம். குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல. குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம். குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள். கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.

இனி கஷ்ட காலங்கள் வரும் போது கடவுளை வையாதீர்கள். அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.

கஷ்டகாலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். முடிவு கண்டிப்பாக இனிமையாகும்.

-யாரோ

Monday, June 14, 2010

என் முதல் முயற்சி


தமிழக முன் பேர வணிகர்களுக்கு வணக்கம்.

இந்த வலை தளத்தில் உயர் மற்றும் பொது உலோகங்களின்
நிலைகளை
தினமும் தகவலாக தரவேன்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்திருக்கிறேன் . இது வரை பிளாக் எழுதிய அனுபவம் இல்லை எதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னித்து கொள்ளவும். மீண்டும் சந்திப்போம் உங்கள்
. பிரஹதிஷ்வரன்


கிரகங்களும் உலோகங்களுக்கும்

ஜோதிடத்தில் கிரஹங்களுக்கும் உலோகங்களுக்கும் உள்ள தொடர்பை
ஆராய்ச்சி செய்து வருகிறேன் இந்த முயற்சி வெற்றி பெற்றால் உலோகங்களின் ஏற்ற இறக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்
இந்த ஆராய்ச்சி பற்றி அவ்வ போது தெரிவித்து வருகிறேன்



ஜோதிட ரீதியாக ஜூலை 21 பிறகு காப்பரில் பெரிய சரிவு காண வாய்ப்பு தென் படுகிறது